×

இங்கிலாந்தில் 7 சிசுக்களை கொன்ற கொடூர நர்சுக்கு வாழ்நாள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

லண்டன்: வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் மருத்துவமனையில் மகப்பேறு செவிலியாக பணியாற்றி வரும் லூசி லெட்பி, 7 சிசுக்களை கொன்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, 7 பெண்கள் உள்பட 11 பேர் கொண்ட நடுவர் குழு 10 மாத ஆய்வுக்கு பின், மேலும் 10 பேருடன் கலந்தாய்வு செய்த பின் லெட்பி மீதான குற்றத்தை கடந்த வாரம் உறுதிபடுத்தினர். இந்நிலையில், இந்த வழக்கினை விசாரித்த மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் பிறந்த சிசுக்களை கொடூரமாக கொன்ற அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீதிபதி ஜேம்ஸ் கோஸ் தனது தீர்ப்பில், “லூசி லெட்பி, குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு போன்ற இயல்பான மனித உள்ளுணர்வுகளுக்கு முற்றிலும் முரணான வகையிலும், மருத்துவ மற்றும் பராமரிப்பு சேவைத் தொழில்களில் பணிபுரிபவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மீறும் வகையிலும் செயல்பட்டுள்ளார். அவர் தீங்கு விளைவித்த குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள், சில சிசுக்கள் உயிர் பிழைக்க முடியாத அபாய கட்டத்தில் இருந்தன. ஆனால் அவர்களை வேண்டுமென்றே காயப்படுத்தி, கொல்லும் நோக்கத்துடன் திட்டமிட்டு கொன்றுள்ளார். எனவே தனது வாழ்நாளின் மீதி நாட்களை அவர் சிறையில் கழிப்பார்,” என்று கூறியுள்ளார்.

The post இங்கிலாந்தில் 7 சிசுக்களை கொன்ற கொடூர நர்சுக்கு வாழ்நாள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : England ,London ,Lucy Ledby ,Chester ,Hospital ,North West England ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை