×

கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஷபனா (30) தேர்வு மையத்தில் ஹிஜாப் அணிந்தபடி இந்தி பிராத்மிக் தேர்வு எழுதியுள்ளார். அவரை தேர்வு மைய கண்காணிப்பாளர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உடையை கழற்ற வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அவர் தேர்வு எழுதாமல் வெளியேறியுள்ளார். இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சிறுபான்மை மக்களின் மத உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,Chennai ,State Secretary of ,Communist Party ,Communist Party of India ,Shabana ,Tiruvannamalai district ,
× RELATED அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம்...