×

தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்: சீன அதிபரை சந்திக்க வாய்ப்பு

புதுடெல்லி: தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். அப்போது சீன அதிபரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்பின் 15வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் இன்று முதல் 24 வரை நடக்கிறது. இதில் உறுப்பு நாடு என்ற முறையில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு தென்னாப்பிரிக்க அதிபர் மத்திமெலா சிரில் ராமபோசா அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா செல்கிறார். பின்னர் அந்நாட்டு அதிபர் ராமபோசாவை சந்தித்து இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து ஆக.25ம் தேதி கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகியை சந்தித்து பேசுகிறார். ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள உள்ளார். அப்போது பிரதமர் மோடி அவரை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி இன்னும் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்யவில்லை. ஆனால் ஜின்பிங்கை சந்திப்பது தொடர்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்: சீன அதிபரை சந்திக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,South Africa, Greece ,President ,New Delhi ,Modi ,South Africa ,Greece ,Dinakaran ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...