×

புல்லரம்பாக்கம் திரவுபதி அம்மன் கோயிலில் ஆடி மாத தீமிதி திருவிழா

திருவள்ளூர்: புல்லரம்பாக்கம் திரவுபதி அம்மன் கோயிலில் ஆடி மாத தீமிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கத்தில் திரவுபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆடி மாத தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி கலசம் எடுத்தல் நிகழ்ச்சியும், 11ம் தேதி முதல் நாள் கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 12ம் தேதி பரகாசூரன் சோறு வழங்குதல் மற்றும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும், 13ம் தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் அம்மன் வீதி உலாவும், 14ம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம் மற்றும் வீதி உலாவும், 15ம் தேதி கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், 16ம் தேதி சைத்தான் ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 17ம் தேதி தர்மராஜா சுவாமி ஊர்வலம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 18ம் தேதி மாடுபிடி சண்டை மற்றும் கிருஷ்ணர் வீதி உலா நிகழ்ச்சியும், 19ம் தேதி அரவான் தலையெடுத்தல் நிகழ்ச்சியும், அன்று இரவு தெருக்கூத்தும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 10ம் நாளான நேற்று முன்தினம் அலகு பானை எடுத்தல் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் தீமிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

இந்த தீமிதி திருவிழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன், துணைத் தலைவர் பேபி மனோகரன், முன்னாள் கவுன்சிலர் கபிலன், கலைச்செல்வி மோகனசுந்தரம், வார்டு உறுப்பினர் தமிழ்புதல்வன் மற்றும் புல்லரம்பாக்கம், திருவள்ளூர், நெய்வேலி, சதுரங்கப்பேட்டை, பூண்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் 8 மணிக்கு மேல் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ஏழுமலை, புத்தமணி, சண்முகம், ஸ்ரீதர், சரத்குமார், ராஜ்மோகன், ஏசுராஜ், சந்தோஷ்குமார், மதியழகன், ராஜ்குமார், அன்பில் சுமன் மற்றும் விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post புல்லரம்பாக்கம் திரவுபதி அம்மன் கோயிலில் ஆடி மாத தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Pullarambakkam ,Fluvupathi ,Amman Temple ,Month Themidi Festival ,Audi ,Thiruvallur ,Pullarambakkam Fluvupathi Amman Temple ,Themiti festival ,Pullerambakkam Fluvathi ,Pularambakkam Fluvathi Adi Monthly Themidi Festival ,
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை