×

ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழப்பு ஜவாஹிருல்லா இரங்கல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: லடாக் பகுதியில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள் என்கிற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சவாலான தட்ப வெப்பநிலையிலும் நாட்டின் பாதுகாப்பிற்கு பங்காற்றிய வீரர்களின் சேவை அளப்பரியது. மதிப்பிட முடியாதது. விபத்தில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் மிக விரைவாக குணம் பெற்றுத் திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

The post ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழப்பு ஜவாஹிருல்லா இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,Chennai ,Humanist People's Party ,Ladakh ,Dinakaran ,
× RELATED ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின்...