×

தட்டச்சர் பதவியில் காலியாக உள்ள 3,373 பணியிடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: குரூப் 4 பணியில் காலியாக உள்ள 3373 தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3373 தட்டச்சர் பணியிடத்துக்கான எழுத்து தேர்வை கடந்த 24.7.2022 அன்று நடத்தியது. எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தர வரிசை எண், இடஒதுக்கீடு விதியின் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த மார்ச் 24ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் 3373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. தேர்வர்களுடன் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்ததால் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு வெளியே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த கலந்தாய்வு அடுத்த மாதம் 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை, 29ம் தேதி ஓணம் பண்டிகை, கிருஷ்ண ஜெயந்தி நீங்கலாக) வரை நடக்கிறது. தினசரி 500 பேர் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் 1079 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அடுத்த மாதம் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஷ்வரி அறிவித்துள்ளார்.

The post தட்டச்சர் பதவியில் காலியாக உள்ள 3,373 பணியிடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,TNPSC ,Dinakaran ,
× RELATED உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்...