சோழிங்கநல்லூர்: வியாசர்பாடி எம்கேபி நகர் 10வது கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுமதி (52). கணவரை இழந்த இவருக்கு கோகுல் (33) என்ற மகனும், தாரணி (31) என்ற மகளும் உள்ளனர். இதில் மது போதைக்கு அடிமையான கோகுல் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். சுமதிக்கு மன அழுத்தம் சம்பந்தமான நோய் இருப்பதால், அவர் அதற்கான மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேதையில் வந்த கோகுல் தாய் சுமதியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுமதி பணம் தர முடியாது எனக் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த கோகுல், தனது தாயின் மாத்திரைகள் விழுங்கி மயக்கமடைந்துள்ளார்.
இதனைப் பார்த்த தாய் சுமதி, வீட்டில் இருந்த சுமார் 40க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை எடுத்து தானும் விழுங்கி, மயங்கியுள்ளார். வீட்டில் தனது தாய் மற்றும் அண்ணன் ஆகிய இருவரும் மயங்கி கிடப்பதைப் பார்த்த தாரணி, இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தாய் சுமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கோகுல் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மகன் தற்கொலைக்கு முயன்றதால் விரக்தி அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தாய் தற்கொலை appeared first on Dinakaran.