×

படூர் ஊராட்சியில் பாரம்பரிய உணவு திருவிழா

திருப்போரூர்: படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், படூர் கிராமப்புற பெண்கள், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பல்வேறு வகையான பாரம்பரிய உணவு பொருட்களை சமைத்து காட்சிப்படுத்தினர். இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட உணவு பொருட்களில் சுவையாகவும், தரமாகவும் இருந்தவற்றை பெண்கள் அதிகாரம் அமைப்பின் இயக்குனர் கவிதா கிரி, மகப்பேறு மருத்துவர்கள் ஜலிதா ஹெலன், ரேவதி ஆகியோர் தேர்வு செய்து பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், படூர் கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் தினை அரிசி பொங்கல், கேழ்வரகு கூழ், கருவாட்டு குழம்பு உள்ளிட்ட 16 வகையான பாரம்பரிய உணவு பொருட்களை சமைத்து முதல் பரிசு பெற்றார். இதைத்தொடர்ந்து பாரம்பரிய உணவு பொருட்களின் நன்மைகள், செய்முறை ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.

The post படூர் ஊராட்சியில் பாரம்பரிய உணவு திருவிழா appeared first on Dinakaran.

Tags : food festival ,Badur panchayat ,Tiruporur ,Badur panchayat council ,president ,Tara Sudhakar ,Badur ,
× RELATED கமுதி அருகே வேளாண் தொழில் நுட்ப...