×

பஞ்சாபி சமூகம் நடத்திய இங்கிலாந்து கபடி போட்டியில் துப்பாக்கிச்சூடு; வன்முறை: 4 பேர் கைது

லண்டன்: பிரிட்டிஷ் பஞ்சாபி சமூகம் நடத்திய கபடி போட்டியில் பயங்கர வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்தின் கிழக்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் டெர்பியின் அல்வாஸ்டனில் உள்ள எல்வாஸ்டன் லேன் பகுதியில் பிரிட்டிஷ் பஞ்சாபி சமூகம் சார்பில் பிரமாண்ட கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்டது. அப்போது திடீரென மோதல் வெடித்தது. இருதரப்பினரும் துப்பாக்கியால் சரமாரி சுட்டுக்கொண்டனர். வாளால் வெட்டினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதை அடுத்து அந்த வீடியோ அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டெர்பிஷயர் காவல்துறையின் தலைமை கண்காணிப்பாளர் எம்மா ஆல்ட்ரெட் கூறினார்.

அவர் கூறுகையில்,’மூன்று பேர் காயமடைந்துள்ளனர்/ ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்’ என்றார். இந்த கபடி போட்டி அங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த போட்டியை காண அதிக அளவு இந்திய வம்சாவளி மக்கள் திரண்டதால் பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

The post பஞ்சாபி சமூகம் நடத்திய இங்கிலாந்து கபடி போட்டியில் துப்பாக்கிச்சூடு; வன்முறை: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : England Kabaddi ,LONDON ,kabaddi ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை