×

சென்னையில் சிறப்பு சோதனை 1,709 குற்றவாளிகளை நேரில் கண்காணித்து 17 பேர் கைது

சென்னை: சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 17 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், சென்னையில் குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற டிஏஆர்இ மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு எதிராக கடந்த 19, 20ம் தேதிகளில் சிறப்பு தணிக்கை நடந்தது. சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு எதிரான சோதனையில் 1709 குற்றவாளிகளை நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

ஏற்கனவே, 590 சரித்திரப் பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சிறப்பு சோதனையில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த 5 குற்றவாளிகளின் இருப்பிடம் அறிந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை காவல்துறையினர் தொடர்ந்து இதுபோன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருவதால், குற்றச் செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post சென்னையில் சிறப்பு சோதனை 1,709 குற்றவாளிகளை நேரில் கண்காணித்து 17 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Police ,Dinakaran ,
× RELATED வழக்கு பதிந்து விசாரிக்க...