
மும்பை: குற்றவியல் அவதூறு புகாரில் புதிய மற்றும் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க ஆர்.எஸ்.எஸ். தொண்டரை அனுமதிப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மகாத்மாகாந்தி படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று ராகுல்காந்தி பேசியதாக கூறி மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் ள்ள பிவாண்டியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராஜேஷ் குண்டே என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை எதிர்த்த ராகுல்காந்தியின் மனுவை கடந்த 2015ல் மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மனுதாரர் ராஜேஷ் குண்டே புதிதாக கூடுதல் ஆவணம் சமர்ப்பிக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதை எதிர்த்து ராகுல்காந்தி சார்பில் வக்கீல் குஷால் மோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்வி கோட்வால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது,’இந்த ஆண்டு ஜூன் மாதம் புதிய ஆவணங்களை சமர்ப்பிக்க குண்டேவுக்கு அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது, பாரபட்சமானது’ என்று ராகுல்காந்தி வக்கீல் குஷால் மோர் தெரிவித்தார். அதற்கு நீதிபதி,’ இந்த விவகாரம் இந்த உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுள்ளது. எனவே அதே நீதிபதி இந்த மனுவை விசாரித்தால் நன்றாக இருக்கும். எனக்கு பதிலாக அதே நீதிபதி இந்த மனுவைவிசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன்’ என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.
The post ஆர்எஸ்எஸ் தொண்டர் வழக்கு: மும்பை உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மனு தாக்கல் appeared first on Dinakaran.