×

4வது ஏழை மாநிலம் ம.பி.: கபில்சிபல் விமர்சனம்

புதுடெல்லி: மத்தியப்பிரதேசம் மிகப்பெரிய 4வது ஏழை மாநிலம் என்று மாநிலங்களவை எம்பி கபில்சிபல் விமர்சித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபாலில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், பாஜ அரசின் 20 ஆண்டுகால வளர்ச்சி திட்டங்கள் குறித்த அறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா மாநிலத்தில் இருந்து பின்தங்கிய என்ற வகை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு தனது டிவிட்டர் பதிவில் பதிலளித்துள்ள மாநிலங்களவை எம்பியான கபில்சிபல், மத்தியப்பிரதேசத்தில் அமித் ஷா: வளர்ந்த தற்சார்பு மாநிலத்துக்கான அடிக்கல் நாட்டினார். ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்ட அறிக்கை (இந்தியா) 1. 4வது ஏழை மாநிலம் 2. வறுமையில் மிகப்பெரிய பங்களிப்பு (28.3சதவீதம்) 3. தேசிய சராசரிக்கு கீழே: கல்வியறிவு, உள்கட்டமைப்பு, பாலின இடைவெளி… ஆத்ம நிர்பார்? வியாபம் ! ஊழல்” என்று குறிப்பட்டுள்ளார்.

The post 4வது ஏழை மாநிலம் ம.பி.: கபில்சிபல் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Rajya Sabha ,Kapil Sipal ,Madhya Pradesh ,Bhopal, Madhya Pradesh ,
× RELATED மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர் பதவி ஏற்பு