×

சாலையில் சென்றவர்களை கத்தியால் வெட்டி வழிப்பறி: 3 வாலிபர்கள் கைது

குன்றத்தூர்: மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (35). இவர், அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை கோவூர் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 வாலிபர்கள், திடீரென ராஜேசை வழிமறித்து, தங்களது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷை வெட்டிவிட்டு, அவரிடமிருந்து செல்போனை பறித்து சென்றனர். அதேபோன்று, பரணிபுத்தூர் மற்றும் சின்ன கொளுத்துவான்சேரி ஆகிய பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற 2 பேரை, அதே மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதில், காயமடைந்த 3 பேரும் மாங்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பின்னர், இது குறித்து மாங்காடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த சூர்யா (22), சபரி (18), சந்தோஷ் (19) ஆகிய 3 பேரும், சாலையில் நடந்து சென்றவர்களை கத்தியால் வெட்டி, செல்போன், பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், நேற்று மாலை தங்களது வீடுகளில் பதுங்கியிருந்த சூர்யா, சபரி, சந்தோஷ் ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post சாலையில் சென்றவர்களை கத்தியால் வெட்டி வழிப்பறி: 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Rajesh ,Sikkarayapuram ,Mangadu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு திருப்போரூர்...