
மதுராந்தகம்: தமிழக முதல்வர் காலை உணவு திட்டம் எதிர்வரும் 25ம் தேதி தமிழகத்தின் 13 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே, மற்ற மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது. இதில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர் பயனடைவார்கள். இந்நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 4.5 லட்சம் மாணவ, மாணவியர் இத்திட்டடத்தின் மூலம் பயனடைவார்கள் என அச்சரப்பாக்கம் வட்டார மகளிர் திட்ட மேலாளர் தானப்பன் தெரிவித்தார்.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் முன்மாதிரி நிகழ்வாக மாணவர்களுக்கு வழங்கப்போகும் உணவு மாதிரி வகை உணவை நேற்று அச்சரப்பாக்கம் ஒன்றியம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மகளிர் கூட்டமைப்பை சேர்ந்த சமையல் பயிற்சி பெற்ற சமையலர்கள் கவிதா மற்றும் பிரேம்குமார் சமைத்தனர். இதனை ஊராட்சி மன்ற தலைவர் வரதன் மற்றும் துணை தலைவர் விஜயகுமார், மகளிர் குழு பொறுப்பாளர்கள் சத்தியா, பாக்கியலட்சுமி, வித்யா, பிரபாவதி, விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் ஜான்பாஷா, ஊராட்சி செயலர் ராஜசேகர் ஆகியோர்கள் பங்கேற்று உணவின் தரம் குறித்து சுவைத்து பார்த்தனர்.
The post முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு மாதிரி உணவு சமைக்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.