
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகத்தின் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நிர்வாகி லாரன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திக், காஞ்சி தொகுதி செயலாளர் கமலநாதன், விசிக தெற்கு ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, சேகர், வடிவுக்கரசி ஆறுமுகம், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில், வாலாஜாபாத் ஒன்றியம், புளியம்பாக்கம் ஊராட்சியில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட 59 பட்டாக்களை, கிராம கணக்கில் ஏற்றி முறையாக பட்டா வழங்க கோரியும், 1995ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த பட்டாவை தற்போது கிராம கணக்கில் ஏற்றாமல் அலைகழித்து வருவதை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்ட குழுவினர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யாவை சந்தித்து முறையிட்டனர். இதில், 3 மாதத்தில் மீண்டும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொண்டனர்.
The post ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.