×

மறைமலை நகர் கிளை அலுவலகத்தில் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடனுதவி மேளா: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் 1949ம் ஆண்டு தொடங்கப்பட்டு, மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன், இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி, தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இந்த தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு, புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும், பல்வேறு சிறப்பு தீட்டத்தின் கீழ், கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மறைமலை நகர் கிளை அலுவலகத்தில் (எச்ஐஜி-42 & 43, முதல் தளம், எம்ஜிஆர் சாலை, மறைமலை நகர், சென்னை – 603 209) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா நேற்று (21ம் தேதி) முதல் செப். 1ம் தேதி வரை நடைபெறுகிறது.இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டிஐஐசி-ன் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி பெரும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 94450 23494, 93426 54834, 94450 23507, 78455 29657 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்று பயன்பெறலாம்.

The post மறைமலை நகர் கிளை அலுவலகத்தில் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடனுதவி மேளா: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Karamalai ,Nagar Branch Office ,Kanchipuram ,Kanchipuram District ,Collector ,Kalaichelvi Mohan ,Tamil Nadu Industry Investment Corporation ,Thiramalai Nagar Branch ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில்...