×

அடைக்கலம் தருவதாக அத்துமீறல்; இறந்துபோன நண்பரின் மகளை பலாத்காரம் செய்த அதிகாரி கைது

புதுடெல்லி: டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் பிரீமோதாய் ஹக்கா இவரது நண்பர் 2020ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி இறந்துவிட்டார். நண்பர் இறந்த பின்னர் அவரது 14 வயது மைனர் மகளுக்கு பிரீமோதாய் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிரீமோதாய் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த பெண் கர்ப்பமானதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்த புகாரின்பேரில் உதவி இயக்குனரும் மற்றும் சிறுமியின் கருவை கலைப்பதற்கு முயற்சித்ததாக அவரது மனைவியையும் டெல்லி போலீசார் நேற்று பிற்பகல் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பிரீமோதாயை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

முதல்வரின் உத்தரவை தொடர்ந்து பிரீமோதாய் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். இந்த கால கட்டத்தில் அவர் அங்கிருந்து அனுமதியின்றி வெளியேறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தலைமை செயலாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அடைக்கலம் தருவதாக அத்துமீறல்; இறந்துபோன நண்பரின் மகளை பலாத்காரம் செய்த அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Assistant Director of ,Women ,and Child Development Department ,Premodai Haka ,
× RELATED மாநில அரசுகளுடன் மோதல் ஆளுநர்கள்...