×

சில்லி பாயிண்ட்

* அவசியம் ஏற்பட்டால் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சாஹல், அஷ்வின், வாஷிங்டன் போன்ற ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

* உலக கோப்பை செஸ்ட் தொடரின் அரையிறுதியில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை 3.5-2.5 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய வீரர் பிரக்ஞானந்தா, பைனலுக்கு முன்னேறி சாதனை படைத்தார். பைனலில் நார்வே நட்சத்திரம் மேக்னஸ் கார்ல்சனை சந்திக்கிறார்.

* கோபன்ஹேகனில் நேற்று தொடங்கிய பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிரணாய், லக்‌ஷியா சென் தகுதி பெற்றுள்ளனர்.

* 4 நாடுகள் ஜூனியர் ஹாக்கி போட்டித் தொடரில் இங்கிலாந்து அணியை 4-0 என்ற கோல் கணக்கில் நேற்று வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

* அயர்லாந்துடன் நடந்த 2வது டி20 போட்டியில் 33 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.

The post சில்லி பாயிண்ட் appeared first on Dinakaran.

Tags : Chahal ,Ashwin ,Washington ,World Cup ,Dinakaran ,
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...