×

சிபிஐ விசாரிக்கும் 6,800 ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை: ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் அறிக்கை

புதுடெல்லி: சிபிஐ விசாரிக்கும் 6,800 ஊழல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த 2022ம் ஆண்டிற்கு ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான கணக்கெடுப்பில், நாடு முழுவதும் சிபிஐ விசாரிக்கும் 6,841 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளன. இதில் 313 வழக்குகள் 20 ஆண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. ஊழல் வழக்ககளில் 12,408 மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. சிபிஐ விசாரணையில் 692 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 42 வழக்குகள் 5 ஆண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. பொதுவாக, சிபிஐ வழக்கு பதிவு செய்த ஓராண்டுக்குள் அதன் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ல் சிபிஐ 946 ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் 829 வழக்கமான வழக்குகள், 117 ஆரம்பகட்ட விசாரணையில் உள்ளவை. 946 வழக்குகளில் 107 வழக்குகள் நீதிமன்ற உத்தரவின் பேரிலும் 30 வழக்குகள் ஒன்றிய, மாநில அரசுகள் பரிந்துரையின் பேரிலும் பதிவு செய்யப்பட்டவை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சிபிஐ விசாரிக்கும் 6,800 ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை: ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : CBI ,Union Anti-Corruption Commission ,New Delhi ,CVC ,Dinakaran ,
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...