×

ஆயுத கும்பல் பிடியிலிருந்து லிபியாவில் மீட்கப்பட்ட 17 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

புதுடெல்லி: லிபியா நாட்டில் ஆயுதக் கும்பலினால் சிறைபிடிக்கப்பட்டிருந்த 17 இந்தியர்கள் மீட்கப்பட்டு பத்திரமாக நாடு திரும்பினர். இந்தியாவின் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்து லிபியா சென்றவர்கள் அங்கு ஸ்வாரா நகரில் ஆயுதக் கும்பலினால் கடத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்டனர். இது குறித்த தகவல் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மூலம் துனிஸ் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கடந்த மே 26ம் தேதி தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, துனிஸ் இந்திய தூதரக அதிகாரிகள் ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டனர். லிபியா அதிகாரிகள் கடந்த ஜூன் 13ம் தேதி அவர்களை மீட்ட போதிலும், லிபியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததால், அவர்களை தங்கள் காவலில் வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெளியுறவு அமைச்சகத்தின் உதவியால், தற்போது அவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் துனிஸ் தூதரகத்தின் தொடர் முயற்சியால், சிறைபிடிக்கப்பட்ட 17 இந்தியர்களும் நேற்று முன்தினம் இரவு தாயகம் திரும்பினர்.

The post ஆயுத கும்பல் பிடியிலிருந்து லிபியாவில் மீட்கப்பட்ட 17 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : Indians ,Libya ,New Delhi ,India ,Punjab ,Ariana ,
× RELATED இதை எல்லாம் மோடி பேச மாட்டார் 70 கோடி...