×

காங். பெண் எம்எல்ஏவுக்கு கத்தி குத்து

ராஜ்நாந்கோன்: சட்டீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கோன் மாவட்டத்தில் உள்ள குஜ்ஜி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பெண் எம்எல்ஏ சன்னி சந்து சஹூ. இவர் நேற்று முன்தினம் மாலை ஜோத்ஹரா கிராமத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேடையில் எம்எல்ஏ சன்னி சந்து நின்றுகொண்டு இருந்தபோது குடிபோதையில் இருந்த நபர் திடீரென எம்எல்ஏவை கத்தியால் குத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்தனர். காயமடைந்த எம்எல்ஏ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கத்தியால் குத்திய கிலேஷ்வரை கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காங். பெண் எம்எல்ஏவுக்கு கத்தி குத்து appeared first on Dinakaran.

Tags : Kong ,MLA ,Rajnandgaon ,Congress ,Sunny Sandhu Sahu ,Gujji ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...