×

பசுமை புத்தாய்வு திட்டம் தொடக்கம்

சென்னை: சென்னை, தலைமைச்செயலகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவிடும் வகையிலும் முதல்வரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் ஆய்வு நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்ட 40 பசுமை தோழர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் இயக்குநர் தீபக் பில்கி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சிறப்புச் செயலாளர்கள் அனுராக் மிஸ்ரா, ரிட்டோ சிரியாக், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் கூடுதல் இயக்குநர் மனிஷ் மீனா, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ், அறிவாற்றல் ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் வெங்கடராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பசுமை புத்தாய்வு திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of Environment and Climate Change ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதம்..!!