
சென்னை: அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய ஆணையிட்டுள்ளனர். மருத்துவப் பணிகள் இயக்குநருக்கு அறிவுறுத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு அளித்துள்ளனர். குடியாத்தம் தாலுகா செம்பள்ளியைச் சேர்ந்த கோகிலா என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட போது முறையாக தையல் போடாததால் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு அளித்துள்ளனர்.
வெளிநோயாளிகள் பிரிவுக்கு பொறுப்பான மருத்துவர்கள், பணியாளர்கள் காலை 7.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை பணியில் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் உள்நோயாளிகள் சேர்க்கையை கண்காணிக்க வேண்டும். மருத்துவ கண்காணிப்பாளர் காலை 8 மணி முதல் அவசரகால அடிப்படையில் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 13,211 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும்பாலும் குறித்த நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனைகளில், பல்துறை மருத்துவர்கள், புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 முதல் நண்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியாற்ற வேண்டும். 24 மணி நேரமும் உள்நோயாளிகள் பிரிவை கண்காணிக்க வேண்டும். மற்ற மருத்துவர்கள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும். நிலைய மருத்துவ அலுவலர் காலை 7 மணி முதல் மருத்துவமனையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை கண்காணிப்பாளர் காலை 8 மணி முதல் பணியை தொடங்குவதுடன் அவசர சிகிச்சைப் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
மாவட்ட தலைமை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில், புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு காலை 7.30 முதல் நண்பகல் 12 மணிவரை செயல்பட வேண்டும். 24 மணி நேரம் பணியில் உள்ள மருத்துவர்கள் பிற்பகல் 3 முதல் மாலை 5 மணி வரை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டும். தலைமை மருத்துவ அலுவலர்கள் காலை 7.30 முதல் பகல் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் மாலை 5 மணி வரையிலும் பணியில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
The post அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.