
துபாய்: நியூசிலாந்து-ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையே 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி நேற்றிரவு துபாயில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன் எடுத்தது. அதிகபட்சமாக வில்யங் 56, மார்க் சாப்மேன் 51 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய அமீரகம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களே எடுத்தது. இதனால் 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து 2-1 என தொடரை கைப்பற்றியது. வில்யங் ஆட்டநாயகன் விருதும், மார்க் சாப்மேன் தொடர் நாயகன் விருதும், பெற்றனர்.
The post யுஏஇ.க்கு எதிரான கடைசி டி.20 நியூசிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.