×

திருச்செந்தூரில் இன்று மட்டும் 200-கும் மேற்பட்ட திருமணங்கள்: ஆவணி வளர்பிறை என்பதால் களைகட்டிய திருமண வைபவங்கள்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் இன்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அதுவும் ஆவணி வளர்பிறை முகூர்த்தம் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.

கூட்டம் காரணமாக கோயிலின் உள்ளே செல்ல முடியாத மணமக்கள் வளாகத்தின் முன்பகுதியிலும், பிரகாரங்களில் நின்றவாறு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோயில் வளாகம் திருமண வீட்டினர் மற்றும் உறவினர்களால் களைகட்டி இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் திணறினர். சன்னதி தெரு, ரத வீதிகள் உள்ளிட்ட திருச்செந்தூரில் முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் திருமணங்கள் அரங்கேறியதால் நகர் முழுவதும் நெரிசல்கள் காணப்பட்டது.

The post திருச்செந்தூரில் இன்று மட்டும் 200-கும் மேற்பட்ட திருமணங்கள்: ஆவணி வளர்பிறை என்பதால் களைகட்டிய திருமண வைபவங்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruchendur ,Thoothukudi ,Thiruchendur Subramanian Swami Temple ,Muruga Bhubaruman ,
× RELATED சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மின்சாரம் தாக்கி பக்தர் பலி..!!