×

ஆசியக்கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார்: தேர்வாளர் அகர்கர்

மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோஹித் ஷர்மா (c), விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷன் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, சிராஜ், குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய 17 பேர் கொண்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

காயம் காரணமாக நீண்ட நாள் அவதிப்பட்டு இந்திய வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆசியக் கோப்பை தொடரில் 17 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர். கே.எல். ராகுல் கடைசியாக ஐபிஎல் 2023 சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறினார்.

அதன் பின்னர் அவரால் போட்டி முழுவதும் விளையாட முடியவில்லை. இந்திய அணி மிக நீண்ட காலமாக மிடில் ஆர்டரில் தடுமாறி கொண்டிருந்தநிலையில், கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பியதால் பலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் இது குறித்து தேர்வாளர் அகர்கர் கூறுகையில், “ராகுல் விக்கெட் கீப்பர் பேட்டராக விளையாடுகிறார். தொடக்க ஆட்டத்தில் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் மிக முக்கியமான வீரர்” என தெரிவித்துள்ளார்.

மேலும் 2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெறவில்லை. இருப்பினும், சாம்சன் ரிசர்வ் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The post ஆசியக்கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார்: தேர்வாளர் அகர்கர் appeared first on Dinakaran.

Tags : K. ,AsiaKopai series ,Raquel ,Agargarar ,Mumbai ,Rohit Sharma ,Asian Cup ,Virat ,AsiaKopp series ,Ragul ,Agargarh ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...