×

தர்மபுரி -மொரப்பூர் இடையே நான்கு வழிச்சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்

*நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஆய்வு

தர்மபுரி : தர்மபுரி -மொரப்பூர் இடையே 4 வழிச்சாலை அகலப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் நே‌ரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி- மொரப்பூர்(அரூர் வழி) சாலையை 2021-22ம் ஆண்டிற்கான முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், இருவழித்தடத்திலிருந்து, நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்பணியினை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கோதண்டராமன் நேரில் ஆய்வு செய்தார். சாலையின் நீளம் மற்றும் அகலம், கனம், சரிவு மட்டம் மற்றும் தரத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம், சேலம் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் வத்சலா வித்யானந்தி, தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் நாகராஜி, உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post தர்மபுரி -மொரப்பூர் இடையே நான்கு வழிச்சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Highway Research Center ,Morapur ,Dinakaran ,
× RELATED கோடுப்பட்டி வனப்பகுதியில் தண்ணீர் குடித்து குதூகலிக்கும் யானைகள்