×

காஷ்மீரில் ராணுவம், தீவிரவாதிகளிடையே கடும் மோதல்: கடும் சண்டையால் புல்வாமா மாவட்டத்தில் பதற்றம்

காஷ்மீர்: தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே விடிய விடிய சண்டை நீடித்து வருகிறது. காஷ்மீருக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் லாரு பறிக்கும் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் உள்ளூர் காவல்துறையினரும் ராணுவ வீரர்களும் சோதனை செய்தனர். அப்போது கட்டட ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்தியா ராணுவமும் பதில் தாக்குதல் மேற்கொண்டது. நள்ளிரவு தொடங்கிய துப்பாக்கி சண்டை காலை வரை நீடித்தது. அதிரடி தாக்குதல் பற்றிய விவரங்களை பாதுகாப்பு படையினர் இன்னும் வெளியிடவில்லை.

The post காஷ்மீரில் ராணுவம், தீவிரவாதிகளிடையே கடும் மோதல்: கடும் சண்டையால் புல்வாமா மாவட்டத்தில் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Pulwama district ,south Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் காவலர்களை...