×

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை; ஒரு மாதமாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்திவைப்பு..!!

சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமினம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும். டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகள் பல மாதங்களாக காலியாக இருந்து வருகின்றன.

முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனிடையே, தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவும், 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களையும் பரிந்துரை செய்து ஆளுநருக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பியது.

பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம். இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்திவைத்துள்ளார். ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை; ஒரு மாதமாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sylendra Babu ,DNBSC ,Chennai ,Silendra Babu ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்...