×

பாஜ மீது மறைமுக தாக்கு நடைபயணத்தால் சர்க்கரை நோய் சரியாகி விடும்: பிரேமலதா விஜயகாந்த் கிண்டல்

சென்னை: ‘‘நடைபயணத்தால் சர்க்கரை நோய் இருந்தாலும் சரியாகி விடும்’’ என பாஜ நடைபயணம் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கிண்டலாக கூறினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, கல்பாக்கம் அடுத்த மெய்யூர் பகுதியில் கொடியேற்றி, கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 71 அடி கொண்ட கொடி மரத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்து, கல்வெட்டை திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:

தேமுதிகவை பொறுத்தவரையில் நீட் தேர்வு என்பது தேவையில்லாதது. நீட் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தற்கொலை என்ற முடிவுக்கு வருவது தவறான செயல். மாணவர்களின் தற்கொலை இதற்கு தீர்வாகாது. இந்த மனநிலையில் இருந்து மாற வேண்டும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் நடைபயணம் புதிதல்ல, பாஜ சார்பில் முதன்முறையாக நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தாக்கம், நாடாளுமன்ற தேர்தல் முடிவிலேயே தெரியும். அதே நேரத்தில் இந்த நடைபயணத்தால் சர்க்கரை நோய் இருந்தாலும் சரியாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ மீது மறைமுக தாக்கு நடைபயணத்தால் சர்க்கரை நோய் சரியாகி விடும்: பிரேமலதா விஜயகாந்த் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Premalatha Vijayakanth ,CHENNAI ,DMD ,Treasurer ,
× RELATED தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது...