×

ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் நார்வே பயணம்

புதுடெல்லி: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் இன்று முதல் 4 நாட்களுக்கு நார்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் கொண்ட உயர் மட்டக் குழு இன்று முதல் வரும் 24ம் தேதி வரை நார்வேக்கு பயணம் மேற்கொள்கிறது. இந்தக் குழுவில் மீன்வளத் துறை உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2010ல் இந்தியாவும் நார்வேயும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு துறையில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

நாளை முதல் 24ம் தேதிவரை நார்வேயின் ட்ரொன்ட்ஹெய்மில் நடைபெறும் அக்வா நார் 2023 கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சியில் இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள், இது மீன்வளர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உலகின் மிகப்பெரிய வர்த்தக நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். மீன்பிடி கப்பல்கள், மீன்பிடி துறைமுகங்கள், குஞ்சு பொரிப்பகங்கள், கூண்டு பண்ணைகள் மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் அலகுகள் போன்ற மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு தொடர்பான நார்வேயில் உள்ள நவீன வசதிகள் சிலவற்றையும் பிரதிநிதிகள் பார்வையிடுவார்கள்.

பிரதிநிதிகள் குழு நார்வே அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்வதோடு, இந்த பகுதிகளில் ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டின் சாத்தியக்கூறுகளை ஆராயும். நார்வேயில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் இக்குழுவினர் கலந்துரையாட உள்ளனர். இந்தப் பயணம், மீன்பிடித் துறையில் இந்தியாவுக்கும் நார்வேக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன் எதிர்காலத்தில் கூட்டாண்மை மூலம் கணிசமான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் நார்வே பயணம் appeared first on Dinakaran.

Tags : Union ,Co ,-Minister ,L. Murugan ,Norway ,New Delhi ,Union Minister ,Union Aquarium ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு மேலாண்மை பட்டய...