×

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் நம்பர் 1 ஸ்வியாடெக்கை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார் கோகோ: முச்சோவாவுடன் பலப்பரீட்சை

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் வெஸ்டர்ஸ் & சதர்ன் சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் உள்ளூர் நட்சத்திரம் கோகோ காஃப் – கரோலினா முச்சோவா (செக்.) மோதுகின்றனர். அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் (22 வயது, போலந்து) மோதிய கோகோ காஃப் (19 வயது, 5வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (7-2) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்த ஸ்வியாடெக் 6-3 என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது.

கடைசி செட்டில் ஸ்வியாடெக்கின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த கோகோ 7-6 (7-2), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 50 நிமிடம் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். ஸ்வியாடெக்குடன் ஏற்கனவே மோதிய 7 முறையும் தோல்வியைத் தழுவியிருந்த கோகோ, முதல் முறையாக வெற்றியை வசப்படுத்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரையிறுதியில் கரோலினா முச்சோவா (26 வயது, 17வது ரேங்க்) 6-7 (4-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்காவை (25 வயது, 2வது ரேங்க்) வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 37 நிமிடத்துக்கு நீடித்தது. இறுதிப் போட்டியில் கோகோ – முச்சோவா பலப்பரீட்சையில் இறங்குகின்றனர்.

The post சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் நம்பர் 1 ஸ்வியாடெக்கை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார் கோகோ: முச்சோவாவுடன் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Cincinnati Open ,Zviatek ,Koko ,Muchova ,Cincinnati ,Wests ,Southern Cincinnati Open Tennis Series ,USA Women's Singles ,Cincinnati Open Tennis ,Sviatek ,Coco ,Dinakaran ,
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையரில்...