×

இன்டர் மயாமி சாம்பியன்

நாஷ்வில்லி: அமெரிக்காவில் நடந்த லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டித் தொடரில், அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. பரபரப்பான பைனலில் நாஷ்வில்லி எஸ்சி அணியுடன் இன்டர் மயாமி அணி மோதியது. 23வது நிமிடத்தில் கேப்டன் மெஸ்ஸி அபாரமாக கோல் அடிக்க, இன்டர் மயாமி 1-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் நாஷ்வில்லி வீரர் ஃபாபா பிகால்ட் பதில் கோல் அடிக்க 1-1 என ஆட்டம் சமனில் முடிந்தது.

இதையடுத்து, 30 நிமிட கூடுதல் நேர ஆட்டத்திலும் கோல் ஏதும் விழாமல் சமநிலை நீடித்ததால், பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் இன்டர் மயாமி அணி 10-9 என்ற கோல் கணக்கில் போராடி வென்று முதல் முறையாக லீக்ஸ் கோப்பையை முத்தமிட்டது. 2020ல் தொடங்கப்பட்ட இன்டர் மயாமி கிளப் தொடர்ச்சியாக சொதப்பி வந்த நிலையில், சமீபத்தில் மெஸ்ஸி அந்த அணிக்கு தலைமையேற்ற பின்னர் புதிய எழுச்சி பெற்றதுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. நடப்பு சீசனில் விளையாடிய 7 போட்டியில் 10 கோல் அடித்த மெஸ்ஸி தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

The post இன்டர் மயாமி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Inter Miami ,Nashville ,Lionel Messi ,League Cup ,America ,Dinakaran ,
× RELATED 8வது முறையாக மெஸ்ஸிக்கு பலான் டி ஆர் விருது