×

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு தர்மஅடி

சேலம்: சேலம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள தும்பிபாடி பகுதியில், இரும்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது.

இங்கு 15க்கும் மேற்பட்ட வடமாநில வாலிபர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அப்பகுதிகளில், இரவு நேரங்களில் வாலிபர்கள் வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில், பள்ளர் காலனி பகுதியில் 3 வாலிபர்கள் பல்வேறு வீடுகளில் உள்ளே நுழைந்து பெண்களிடம் பாலியல் தொந்தவு செய்துள்ளனர். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே 2 பேர் தப்பியோடி விட்டனர். மற்றொருவரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், அந்த வாலிபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு தர்மஅடி appeared first on Dinakaran.

Tags : Salem ,North State ,
× RELATED வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் சேலம் அருகே பரபரப்பு