×

வரும் 25ம் தேதி தொழில் கடன் விழா ஒன்றிய, மாநில அரசு மானியத்தில் கடன் உதவி; திருவள்ளூர் கலெக்டர்

திருவள்ளூர்: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், மாநில அளவில் செயல்பட்டுவரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகமாகும். 1949 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும் உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும், பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை, 86, சி அன்ட் டி, 2 வது பிரதானசாலை, அம்பத்தூரில் உள்ள திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன்விழா வருகிற 21ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு தொழில்கடன் விழாவில், டி.ஐ.ஐ.சி யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் மாநில அரசின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்து விளக்கம் தரப்படுகிறது. தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக்கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை புதியதொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகைதந்து தொழில்கடன் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். 25ம்தேதி வெள்ளிக்கிழமை திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தின் 2ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், மதியம் 3 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பாக நடைபெறும் சிறப்பு தொழில்கடன் விழாவுக்கு வருகைதந்து பயன்பெறவேண்டும்.
இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post வரும் 25ம் தேதி தொழில் கடன் விழா ஒன்றிய, மாநில அரசு மானியத்தில் கடன் உதவி; திருவள்ளூர் கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Union ,industrial loan festival ,Thiruvallur ,Tiruvallur ,Tamil Nadu Industrial Investment Corporation ,Tamil Nadu ,25th Industrial Loan ,Festival ,Loan ,
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...