×

நீட் விலக்கு கோரி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!

சென்னை: நீட் விலக்கு கோரி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர்; 21 தற்கொலைகளும் கொலையே, இதை செய்தது ஒன்றிய பாஜக அரசு. ஒவ்வொரு மாவட்டத்திலும் 8000 முதல் 10,000 பேர் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்ன அதிகாரம் உள்ளது. ஆளுநர் ரவி என்ன மக்கள் பிரதிநிதியா என்று அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று கூற ஆளுநர் ரவி யார். போராட்டத்தில் பங்கேற்றால் அமைச்சர் பதவி பறிபோகும் என்று சிலர் கூறினார்கள்.

அமைச்சர் பதவி பற்றி எனக்கு கவலை இல்லை. உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சராகவோ, எம்.எல்.ஏ.வாகோ பங்கேற்கவில்லை. உங்களின் சகோதரனாக வந்துள்ளேன். நீட் தேர்வால் உயிரிழந்த 21 மாணவர்களின் சகோதரனாக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றேன். நீங்கள் ஆளுநர் ரவி அல்ல, ஆர்.எஸ்.எஸ். ரவி என்று கூறியுள்ளார். மாணவர்களுக்காக எதையும் இழக்கத் தயார். நீங்கள் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலில் நின்று வெற்றி பெற தயாரா? என அமைச்சர் உதயநிதி சவால் விடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை தமிழ்நாடு மக்களிடம் சொன்னால் காலணியால்” அடித்து விரட்டிவிடுவார்கள் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநரிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்ட அம்மாசியப்பன் நடவடிக்கை எடுக்க பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அம்மாசியப்பன் வேலைக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் சும்மா விட மாட்டோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான முழு நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிக்காத ஒரே கட்சி பாஜகதான். மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மட்டும் அனுப்புவதுதான் ஆளுநரின் பணி. தகுதியற்ற நீட் தேர்வை என்றைக்கு ஒழிக்கிறோமோ அன்றைக்குதான் தமிழ்நாடு மாணவர்களுக்கு விடியல் கிடைக்கும்.

நீட் விலக்குக்கான இன்றைய போராட்டம் ஆரம்பம் மட்டுமே, இது முடிவல்ல. நீட் எதிர்ப்பு போராட்டத்தை அனைத்துக் கல்லூரி மாணவர்களும் முன்னெடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் போல் மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட்டுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் மரணத்தை ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கொச்சைப்படுத்துகிறார். பொதுத்தேர்வில் அனிதா உள்ளிட்டோர் பெற்ற மதிப்பெண்கள் பற்றி தெரியாமல் எல்.முருகன் பேசுகிறார்.

நீட் தேர்வை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற தயாரா?. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக என்ற ஒரு கட்சியே தேவையில்லை. பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அதிமுக இளைஞரணி, மாணவரணியைச் சேர்ந்தவர்களை அனுப்ப தயாரா?. இல்லாத அதிகாரத்தை தனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு ஆளுநர் செயல்படுவதாக அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

The post நீட் விலக்கு கோரி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,
× RELATED கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில்...