×

அரசு முறை பயணமாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று அமெரிக்கா செல்கிறார்: வரும் 31ம் தேதி சென்னை திரும்புகிறார்

சென்னை: அரசு முறை பயணமாக 10 நாட்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமெரிக்கா செல்கிறார். தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் துறை சார்ந்த பயணமாக அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, சிலி உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்கிறார். 10 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு வருகின்ற 31ம் தேதி சென்னை திரும்புகிறார்.

தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து இன்று தி.மு.க இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மாலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.

The post அரசு முறை பயணமாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று அமெரிக்கா செல்கிறார்: வரும் 31ம் தேதி சென்னை திரும்புகிறார் appeared first on Dinakaran.

Tags : Govt. ,Moe anbarasan ,chennai ,Minister of State ,Govt ,Moe Andarasan ,America ,Tamil Nadu ,USA ,
× RELATED தொழிற்பேட்டைகள் மழைநீரால் பாதிப்பு;...