×

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக இரட்டைவேடம்: திருச்சி சிவா எம்பி தாக்கு

திருச்சி: திருச்சியில் சிவா எம்பி இன்று அளித்த பேட்டி: நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவை பாஜ ஒன்றிய அரசு நசுக்குகிறது. கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்களுக்கு அனுபவமில்லாத கல்வி முறையில் நீட் தேர்வு நடத்தப்படுவதால் அவர்களின் மருத்துவ படிப்பு கனவு நிராகரிக்கப்படுகிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென திமுக அரசு போராடி வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்தின்போது வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்து அதிமுக பச்சை துரோகம் செய்தது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது, நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக நடந்து கொள்வது என அதிமுக இரட்டை வேடம் போட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக இரட்டைவேடம்: திருச்சி சிவா எம்பி தாக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Trichy Siva ,Thaku ,Trichy ,Siva MP ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள...