- ஓப்பிலா வெயர்
- ஒண்டிவீரன்
- தென் தென் நாள்
- செவ்வாய்
- முதல் அமைச்சர்
- கெ ஸ்டாலின்
- சென்னை
- ஓண்டிவிவீரன்
- முகராஷ்டிரா
- கெ ஸ்டாலின்
- ஓப்பிலா வயார் ஒண்டிவீரன்
- தென்கிழக்குப் போரின் நினைவு நாள்
- கி.மு.
- தின மலர்
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை புகழாரம் சூட்டியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அவரது தீரத்தை நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒண்டிவீரனின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள்! கிழக்கிந்தியப் படைகளைத் தன் மதிநுட்பத்தால் வீழ்த்தி, பிறந்த மண்ணின் மானம் காத்த படைத்தளபதி ஒண்டிவீரன் தமிழ்நிலத்தின் போர்க்குணத்திற்குத் தலைசிறந்த சான்று! என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளையொட்டி அமைச்சர்கள், சபாநாயர்கள் ஆகியோர் அவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
The post தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்! appeared first on Dinakaran.