×

லடாக் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை அறிந்து மிக வேதனை அடைந்தேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!

சென்னை: லடாக் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை அறிந்து மிக வேதனை அடைந்தேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். லடாக்கின் தெற்கு பகுதியான நியாமோ மாவட்டத்தில் உள்ள கியாரி பகுதிக்கு அருகே ராணுவ வீரர்களை ஏற்றுக்கொண்டு ராணுவ வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலையோரம் இருந்த செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ராணுவ வாகனத்தில் பயணம் செய்த வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 9 ராணு வீரகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், லடாக் வாகன விபத்தில் உயிரிழந்த 9 ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; லடாக்கில் துரதிருஷ்டவசமான சாலை விபத்தில் நமது துணிச்சல்மிகு ராணுவத்தினர் வீரமரணம் அடைந்ததை அறிந்து மிக வேதனை அடைந்தேன். துயர்மிகு இந்நேரத்தில் என் எண்ணங்கள் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுடன் உள்ளன. சம்பவத்தில் காயமடைந்த வீரர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post லடாக் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை அறிந்து மிக வேதனை அடைந்தேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Ladakh accident ,Governor RN ,Ravi ,Chennai ,
× RELATED ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள்...