×

நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி மதுரை தவிர தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் உயிரிழந்த 24 மாணவர்களுக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டங்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். ஒன்றிய அரசு, ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி வந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி, இளைஞரணி, மருத்துவரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் பலர் எதிர்க்கின்றனர்; ஆனால் மோடி அரசு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்; ஏனென்றால், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ஆதிக்கக்காரர்களால் அமல்படுத்தப்பட்டது நீட் தேர்வு . பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்பை நீட் தேர்வால் இழந்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய அரசியல்வாதிகள் மட்டுமல்ல கல்வியாளர்களும் ஆதரவு அளித்துள்ளனர். உயிரிழக்கும் மாணவர்களை பற்றி கவலைப்படாமல் நீட் தேர்வை திணிக்கவே ஒன்றிய மோடி அரசு செயல்படுகிறது. நீட் தேர்வு ஒழிந்தது என்பது வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

The post நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது: அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kanjagar ,Minister ,Thuraymurugan ,Chennai ,Tamil Nadu ,Madurai ,Chennai Valluargotam ,Tsagam ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...