×

காந்தி மண்டப மேம்பாலத்தில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை, ஆக.20: சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் உள்ள காந்தி மண்டபம் பாலம், பரபரப்பான நேரங்களில் கிண்டியிலிருந்து ஓஎம்ஆர் மற்றும் அடையாறு செல்லும் வாகனங்களால், மத்திய கைலாஷ் முதல் தாலுகா ஆபீஸ் ரோடு வரை அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் 3 நாட்கள் சோதனை ஓட்டமாக 21.8.23 (நாளை) அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து சீராக செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, கிண்டியில் இருந்து ஓஎம்ஆர் மற்றும் அடையாறு செல்லும் வாகனங்களை காலை 9 மணி முதல் 11 மணி வரை காந்தி மண்டபம் பாலம் வழியாக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு ஓஎம்ஆர் மற்றும் அடையாறு செல்லலாம்.ஓஎம்ஆர் மற்றும் அடையாறில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் 21ம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை காந்தி மண்டபம் பாலம் அடைக்கப்பட்டு காந்தி மண்டபம் சர்வீஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறது.

The post காந்தி மண்டப மேம்பாலத்தில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Gandhi Mandapa ,Chennai ,Chennai Traffic Police Department ,Gandhi Mandapam ,Kindi Sardar Patel Road ,Dinakaran ,
× RELATED இரவு பகலற்ற ஒளியாக அயோத்திதாச...