×

சைக்கிள் திருடிய 2 பேர் கைது

குளச்சல், ஆக.20: மண்டைக்காடு அருகே பிலாவிளையை சேர்ந்தவர் ஞானராபி (52). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்த மர்ம ஆசாமிகள் ஞானராபி வீட்டில் வைத்திருந்த புதிய சைக்கிள் மற்றும் ஒரு வெண்கல குட்டுவத்தையும் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.13 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து ஞானராபி மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வந்த நிலையில் இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த டேவிட்ராஜ் (28) மற்றும் பரம்பையை சேர்ந்த பால்ராஜ் (38) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருட்டு போன சைக்கிள் மற்றும் குட்டுவம் மீட்கப்பட்டது.

The post சைக்கிள் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Gnanarabi ,Pilavlai ,Mandaikkadu ,Dinakaran ,
× RELATED குளச்சல் அருகே பரபரப்பு ஆக்ரமிப்பு...