×

கம்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு பணி: நகராட்சி அதிகாரிகள் தொடங்கினார்

கம்பம், ஆக. 20: கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை விரிவு படுத்த அளவீடு பணிகளை நகராட்சி அதிகாரிகள் தொடங்கினர். கம்பம் நகராட்சி புதிய பேருந்து நிலையம் வரும் பேருந்துகளின் வழித்தடங்களை மாற்றி அமைப்பதற்காக சாலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு கட்டப்பட்ட கடைகளை அகற்றுவதற்கு கம்பம் நகராட்சி கட்டிட ஆய்வாளர் முகமது சலீம் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பம் நகருக்கு வரும் பேருந்துகளின் வழித்தடங்களை மாற்ற வேண்டும் என புதிய பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள், சங்கப் பிரதிநிதிகளிடம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் கூறினர். இதையடுத்து கம்பம் நகருக்கு வரும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மாரியம்மன் கோவில் வழியாக பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு பதிலாக கம்பம் சிக்னல் வழியாக பேருந்து நிலையத்துக்குள் வருவதற்கு இடையூறுகள் ஏற்படும் வகையில் சாலைகளில் உள்ள ஆக்கிரம்புகள் அகற்றுவதற்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

The post கம்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு பணி: நகராட்சி அதிகாரிகள் தொடங்கினார் appeared first on Dinakaran.

Tags : Pole ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி