×

சிவகங்கை மாவட்ட வைகையாற்றில் பல ஆண்டுகளுக்கு பின் உயிர் பெறும் நிலத்தடி நீர்: பங்கு நீரை பெற நடவடிக்கை தேவை

சிவகங்கை, ஆக. 20: சிவகங்கை மாவட்ட வைகையாற்றில் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் கடந்த சில ஆண்டுகளாக உயிர் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட சிலைமான் தொடங்கி பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை ஆற்றுக்குள் 120குடிநீர் திட்டங்கள் உள்ளன. நிலத்தடி நீர் பாதிப்பால் தற்போது 56திட்டங்கள் மூலம் நாள் ஒன்றிர்க்கு ஒரு கோடியே 50லட்சம் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. வைகை ஆற்றில் வரும் நீரின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி தாலுகாக்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். விரகனூர் மதகு அணையில் திறந்துவிடப்படும் நீர் மானாமதுரை முகப்பு வழியே கீழப்பசலை கால்வாய் வரை வரும். மேலும் ஆற்றில் இருந்த நீர்வள ஆதாரங்கள் அனைத்தும் மணல் அள்ளப்பட்டதால் குறைந்தது.

The post சிவகங்கை மாவட்ட வைகையாற்றில் பல ஆண்டுகளுக்கு பின் உயிர் பெறும் நிலத்தடி நீர்: பங்கு நீரை பெற நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Tags : Sivaganga District Vaigaad ,Sivaganga ,Ag. 20 ,Sivaganga District Vaigayad ,Sivaganga District ,Vaigayad ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...