×

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஆக. 20: திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் ஜெயலெட்சுமி தலைமை வகிக்க, வட்டார செயலாளர் முருகவள்ளி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விவேகானந்தன், மாவட்ட துணை தலைவர் ராஜமாணிக்கம், வட்ட கிளை பொருளாளர் பூசாரி வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வட்டார பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

The post சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thindikal ,Dintugul Union Office ,Tamil Nadu Nutritional Employees Association ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு ரூ.601 கோடி கடனுதவி