
- மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி
- ஸ்பெயின்
- இங்கிலாந்து
- சிட்னி
- FIFA பெண்கள் உலகக் கோப்பை
- பிபா உலகம்…
- தின மலர்
சிட்னி: பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. பிபா உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டியின் 9வது தொடர் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நகரங்களில் ஜூலை 20ம் தேதி முதல் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நடப்பு சாம்பியன் அமெரிக்கா நாக் அவுட் சுற்றுடன் நடையை கட்டியது. சுவீடனை தவிர ஸ்பெயின், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடனையும், இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தன.
இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பிபா மகளிர் அணிகளுக்கான உலகத் தரவரிசையில் இங்கிலாந்து 4வது இடத்திலும் , ஸ்பெயின் 6வது இடத்திலும் உள்ளன. அது மட்டுமல்ல இதுவரை இந்த 2 அணிகளும் மோதிய சர்வதேச ஆட்டங்களில் இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆனால் விளையாட்டில் எதுவும் நடக்கலாம். எனினும் எந்த அணி வென்றாலும் அது புது சாம்பியனாக இருக்கும். அதுமட்டுமல்ல மகளிர் உலக கோப்பைகளில் இந்த 2 நாடுகளும் முதல் முறையாக மோத உள்ளன.
* சுவீடன் 3வது இடம்
பிரிஸ்பேனில் நேற்று நடந்த 3வது இடத்துக்கான ஆட்டத்தில் அரையிறுதியில் வாய்ப்பை இழந்த சுவீடன்(3வது ரேங்க்)-ஆஸ்திரேலியா(10வது ரேங்க்) அணிகள் மோதின. அதில் சுவீடன் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று 3வது இடத்தை பிடித்தது. போட்டியை நடத்திய மற்றொரு நாடான நியூசிலாந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. அதே நேரத்தில் போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா இந்த தொடரின் மூலம் உலக கோப்பையில் முதல் கோல், முதல் வெற்றி, முதல் காலிறுதி, முதல் அரையிறுதி என முன்னேறி 4வது இடத்தையும் முதல்முறையாக பிடித்துள்ளது.
* நேருக்கு நேர்…
இந்த 2 அணிகளும் இதுவரை 11 சர்வதேச ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் 6 ஆட்டங்களில் இங்கிலாந்தும், 2ஆட்டங்களில் ஸ்பெயினும் வென்றுள்ளன. எஞ்சிய 3 ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன.
கடைசியாக…
* இங்கிலாந்து விளையாடிய கடைசி 6 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்கவில்லை.
* ஸ்பெயின் தான் கடைசியாக ஆடிய 6 ஆட்டங்களில் 5ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
The post இன்று மகளிர் உலக கோப்பை பைனல்: ஸ்பெயின் இங்கிலாந்து பலப்பரீட்சை appeared first on Dinakaran.