×

நாட்டின் அதிகார அமைப்புகளில் ஆர்எஸ்எஸ்-பாஜவினருக்கு பணி வழங்கப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டின் அதிகார அமைப்புகளில் ஆர்எஸ்எஸ், பாஜவினருக்கு பணி வழங்கப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அங்கு இளைஞர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியாவில் சுதந்திரத்தின் அடித்தளம் அரசியலமைப்பாகும். அரசியலமைப்பு என்பது விதிகளின் தொகுப்பாகும். அரசியலமைப்பின் பார்வைக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களை அமைப்பதன் மூலம் நீங்கள் அரசியலமைப்பை செயல்படுத்துகிறீர்கள்.

ஆனால் பா.ஜ, ஆர்எஸ்எஸ் ஆகியவை நாட்டின் முக்கிய நிறுவன கட்டமைப்பான இவற்றில் உள்ள முக்கிய பணிகளில் தங்கள் அமைப்பைச்சேர்ந்தவர்களை பணியமர்த்தி வருகிறார்கள். உதாரணமாக, நீங்கள் ஒன்றிய அமைச்சர்களிடம் சென்று, ‘உங்கள் அமைச்சகங்களில் நீங்கள் உண்மையில் முடிவுகளை எடுக்கிறீர்களா’ என்று கேட்டால், அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள், ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்த ஒருவருக்கு நாங்கள் வேலை செய்ய வேண்டும். இப்போது அமைச்சகத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று கூறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* நிதின்கட்கரி மறுப்பு
ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ‘ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் நகைப்பிற்குரியவை. அமைச்சர்கள் பணியாற்றும் அமைச்சகங்களில் ஆர்எஸ்எஸ் நபர் யாரும் இல்லை’ என்றார்.

The post நாட்டின் அதிகார அமைப்புகளில் ஆர்எஸ்எஸ்-பாஜவினருக்கு பணி வழங்கப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : RSS ,BJP ,Rahul Gandhi ,New Delhi ,Congress ,president ,Ladakh ,Bajwain ,Dinakaran ,
× RELATED பா.ஜ.க.வும் பி.ஆர்.எஸ். கட்சியும்...