×

4வது முறையாக மீண்டும் திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை, கரடி நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் 4வது முறையாக சிறுத்தை, கரடி நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுவன் சவுசிக் காயங்களுடன் மீட்கப்பட்டார். நெல்லுரை சேர்ந்த 6 வயது சிறுமி லட்ஷிதா சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஜூன் 24ம்தேதி முதலில் பிடிபட்ட சிறுத்தை மட்டும் பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

இதில், லட்ஷிதாவின் மனித மாமிசம் சாப்பிட்டதற்கான மரபணு உள்ளதா? என்றும், லட்ஷிதாவின் மரபணுவுடன் ஒத்துபோகிறதா? என்பதையும் அறிந்து அதனை தனிமைப்படுத்த 2 சிறுத்தைகளுக்கும் ரத்தம், நகம், முடி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும், மரபணு சோதனை முடிவுகள் தெரியவில்லை. இந்த நிலையில், கரடியும் அவ்வப்போது நடைபாதையில் வருகிறது. நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் கேமராவில் பதிவாகி உள்ளது. அவர்கள் மூலம் தொடர்ந்து நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது வனத்துறை கேமராவில் 4வது முறையாக மீண்டும் சிறுத்தை பதிவாகி இருப்பது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

* பக்தர்களின் வருகை குறைந்தது
திருப்பதி ஏழுமலையானை வழக்கமாக 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்தார். மேலும், தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் 61 ஆயிரத்து 904 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 205 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். ரூ.3.42 கோடி காணிக்கையாக கிடைத்தது.

The post 4வது முறையாக மீண்டும் திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை, கரடி நடமாட்டம்: பக்தர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Pass ,Tirumala ,Tirupati mountain pass ,Tirupati ,Tirupati mountain ,Dinakaran ,
× RELATED தெலங்கானாவில் இன்று பிரசாரம்...