×

இங்கிலாந்தில் 7 பச்சிளங்குழந்தைகளை கொன்ற நர்ஸ் குற்றவாளி: இந்திய டாக்டர் உதவியால் சிக்கினார்; நாளை தண்டனை அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 7 பச்சிளங்குழந்தைகளை கொன்ற நர்ஸ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய டாக்டர் உதவியால் அவர் சிக்கினார். இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் முதல் 2016ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்ஸ், சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெரிந்தது.

விசாரணையின் போது குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து சாட்சியங்களாக பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து நர்சு லூசி லெட்பி 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். நர்ஸ் லூசி லெட்பி சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம் உதவி உள்ளார். 7 பச்சிளம் குழந்தைகளை கொன்றதாகவும் மற்றும் 6 குழந்தைளை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் லூசி லெட்பி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் அவரை குற்றவாளி என மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்ற நீதிபதி அறிவித்து அவருக்கான தண்டனை குறித்து நாளை அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

The post இங்கிலாந்தில் 7 பச்சிளங்குழந்தைகளை கொன்ற நர்ஸ் குற்றவாளி: இந்திய டாக்டர் உதவியால் சிக்கினார்; நாளை தண்டனை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : UK ,London ,England ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...